சேலம் சரகத்தில் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம்

சேலம் சரகத்தில் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.;

Update: 2021-12-07 23:18 GMT
சேலம்:
சேலம் சரகத்தில் நிர்வாக காரணங்களுக்காக போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணி இடமாற்றம் செய்து மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி கோவை சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி, தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டிற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டைக்கும், ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம், சேலம் மாவட்டம் கொளத்தூருக்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். 
மேலும் திருப்பூரில் பணியாற்றிய மகேந்திரன், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கும், கோவையில் பணியாற்றிய வேலுதேவன், தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டிக்கும், கோவை கிணத்துக்கடவு இன்ஸ்பெக்டர் சுரேஷ், நாமக்கல் மாவட்டம் பரமத்திக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதே போன்று சேலம் சரகத்தில் மொத்தம் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்