சேதமடைந்த பாலம்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கீழஉச்சாணியில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்து காணப்படுகிறது. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், ரேஷன் கடைக்கு செல்பவர்கள் என அத்தியாவசிய தேவைக்கு செல்லும் மக்கள் அனைவரும் இந்த பாலத்தை கடந்து தான் செல்கின்றனர். போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாலம் தற்சமயம் சேதமைடந்து காணப்படுகிறது. எனவே சேதமடைந்த பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் கட்டி தருவார்களா?
பிரபு, கீழஉச்சாணி.
குண்டும், குழியுமான சாலை
விருதுநகர் மாவட்டம் நாயக்கம்பட்டி ஊராட்சி கன்னிச்சேரியில் மழையால் சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மாணவ-மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கன்னிச்சேரி.
ஒளிராத மின் விளக்கு
மதுரை கோச்சடை பகுதியில் உள்ள கரின அம்பலக்காரர் தெருவில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பத்தில் மின் விளக்கு பல நாட்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் இப்பகுதி இருட்டாக காணப்படுகிறது. ஆதலால் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே மின்விளக்குகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கேட்டுகொள்கிறோம்.
பொதுமக்கள், கோச்சடை.
சாலை வசதி
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கண்டவராயன்பட்டியில் உள்ள கம்பளை சாத்தப்ப செட்டியார் தெருவில் உள்ள சாலை மண் சாலையாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் இந்த சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மண்சாலையை தார்ச்சாலையாக மாற்றி தர நடவடிக்கை எடுப்பார்களா.
வல்லநாட்டான், கண்டவராயன்பட்டி.
கிடப்பில் போடப்பட்ட பணி
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் குன்றங்குடி ஊராட்சியில் உள்ள சரவணா நகரில் சாலை அமைக்கும் பணி வெகுநாட்களாக நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பல மாதங்களாக பணிக்கு தேவயைான கல் மற்றும் மண் சாலையின் நடுவே குவித்துவைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கொட்டப்பட்டுள்ள கற்குவியலால் இரவில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், குன்றங்குடி.
குண்டும் குழியுமான சாலை
மதுரை கோச்சடை முடக்குச்சாலையின் இருபுறமும் குண்டும், குழியுமாக உள்ளது. இங்கு மழை நீர் தேங்கி நிற்பதால் வாகனஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் இந்த சாலையில் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றி சாலையை சீரமைக்க வேண்டும்.
டி.ராஜன், கோச்சடை.
பஸ்வசதி
சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரில் இருந்து ஆலம்பட்டு, கல்லல், குருந்தம்பட்டு வழியாக காரைக்குடி செல்லும் வழிதடத்தில் மதியம் இயங்கிவந்த பஸ் தற்சமயம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு செல்பவர்கள் உள்பட அனைவரும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன்கருதி நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் தொடங்குவார்களா?
காசிரவீந்திரன், குருந்தம்பட்டு.
பாலம் பயன்பாட்டிற்கு வருமா?
மதுரை வைகைஆற்றில் பரவையிலிருந்து துவரிமான் சாலையை இணைக்கும் வகையில் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட்டு வெகுநாட்களாகிவிட்டது. பரவை மெயின் ரோட்டை இணைக்கும் வகையில் சாலை அமைத்தால் விரைவில் பயன்பாட்டுக்கு வந்து விடும். இதன் மூலம் போக்குவரத்து நெரிசலும் குறையும். எனவே இணைப்பு சாைல வசதி அமைத்து கொடுத்து பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
- பொதுமக்கள், பரவை.