விஷம் குடித்து டிரைவர் சாவு

விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற டிரைவர் பரிதாபமாக இறந்தார். அவருடைய மனைவி, மகளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2021-12-07 20:03 GMT
நாகமலைபுதுக்கோட்டை, 
விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற டிரைவர் பரிதாபமாக இறந்தார். அவருடைய மனைவி, மகளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டிரைவர்
மதுரை வடபழஞ்சியை சேர்ந்தவர் மலைச்சாமி (வயது 47). இவரது மனைவி ஜெயா. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். மலைச்சாமி பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதியம் அடிப்படையில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். 
இந்தநிலையில் நேற்று பிற்பகல் 2 மணிஅளவில் மலைச்சாமி, அவரது மனைவி ஜெயா மற்றும் 17 வயதுடைய அவர்களது 3-வது மகள் ஆகியோர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். அவர்களில் மலைச்சாமி இறந்தார். மற்ற 2 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விசாரணை
இதுகுறித்து நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து அறிய தீவிர விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்