தொடர் மழையினால் நிரம்பிய கண்மாய்கள்

தொடர் மழையினால் சாத்தூர் பகுதியில் உள்ள கண்மாய்கள் நிரம்பின. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2021-12-07 20:02 GMT
சாத்தூர், 
தொடர் மழையினால் சாத்தூர் பகுதியில் உள்ள கண்மாய்கள் நிரம்பின. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 
தொடர்மழை
சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் சாத்தூர் அருகே சின்னதம்பியாபுரம், ஓ.மேட்டுப்பட்டி, ராமலிங்காபுரம், பாப்பாகுடி, நள்ளி, நல்லமுத்தன்பட்டி, அழகாபுரி, ஆகிய பகுதிகளில் உள்ள கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்கின்றன.
இதனைத் தொடர்ந்து தாசில்தார் சீதாலட்சுமி, தனி தாசில்தார் (சமூக பாதுகாப்பு திட்டம்) வெங்கடேஷ், துணை தாசில்தார் ராஜாமணி, வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் சரவணகுமார், பாண்டியராஜ் ஆகியோர் நீர் நிரம்பி மறுகால் பாயும் கண்மாய் மற்றும் குளங்களில் ஆய்வு மேற்கொண்டனர். 
நீர்வரத்து அதிகரிப்பு
தொடர் மழையினால் கண்மாய் மற்றும் குளங்கள் நிறைந்து உள்ளன. தொடர்ச்சியாக நீர் வரத்தும் அதிகரித்து உள்ளது. 
எனவே பொதுமக்கள் கண்மாய், குளங்கள் பக்கம் செல்ல வேண்டாம் எனவும், சிறிய குழந்தைகளை அந்த  பகுதிக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். 

மேலும் செய்திகள்