‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்;
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தேங்கி கிடக்கும் குப்பைகள்
தஞ்சை பகுதி உமாநகர், ரமணி காலனி குடியிருப்பில் உள்ள சாலையோரத்தில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. தேங்கி கிடக்கும் குப்பைகளில் இரை தேடி கால்நடைகள் அதிகளவில் குவிந்துவருகிறது. இவை சாலையில் அங்கும், இங்கும் ஓடுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும், குவிந்து கிடக்கும் குப்பையினால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டுமின்றி குப்பைகளில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், தஞ்சை.
தொற்று நோய் பரவும் அபாயம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள காந்திநகர் கிழக்கு பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. தேங்கி கிடக்கும் நீரில் இருந்து விஷப்பூச்சிகள் வெளியேறி வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது. இதன் காரணமாக வீடுகளில் உள்ள பெண்கள், குழந்தைகள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர். மேலும், தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், தஞ்சாவூர்.
சுகாதார சீர்கேடு
தஞ்சை புதிய பஸ் நிலையத்தில், பழைய பஸ் நிலையத்துக்கு செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்துக்கு அருகே பாதாள சாக்கடை குழி ஒன்று உள்ளது. இந்த குழியில் இருந்து அடிக்கடி கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுகள் உற்பத்தியாகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், தஞ்சை.
தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீர்
தஞ்சை மானம்புச்சாவடி பகுதி அய்யன்பெருமாள் கொத்தன் தெருவில் கழிவுநீர் வடிகால் வசதி இல்லை. மேலும், பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி வீடுகளுக்கு முன்பு தேங்கி கிடக்கிறது. இதன்காரணமாக தெரு முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டுமின்றி தேங்கி கிடக்கும் கழிவு நீரால் தெருவில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தேங்கி கிடக்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-புஷ்பலதா, தஞ்சை.