போலீஸ் நிலையம் அருகே மலைப்பாம்பு சிக்கியது

மலைப்பாம்பு சிக்கியது

Update: 2021-12-07 18:37 GMT
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே கண்டவராயன்பட்டி போலீஸ் நிலையம் அருகே உள்ள பகுதியில் நேற்று முன்தினம் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு வந்துள்ளது. இதைப்பார்த்த போலீசார் திருப்பத்தூர் தீயணைப்புத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் ஊர்ந்து செல்ல முடியாமல் கிடந்த மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். 

மேலும் செய்திகள்