அ.தி.மு.க. பிரமுகர் ஆசிட் குடித்து தற்கொலை

ஆற்காடு அருகே அதிமுக பிரமுகர் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2021-12-07 18:33 GMT
ஆற்காடு

ஆற்காடு அருகே அ.தி.மு.க.பிரமுகர் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். முன்னாள்  ஒன்றிய கவுன்சிலரான இவர் ஆற்காடு ஒன்றிய அ.தி.மு.க. இளைஞரணி தலைவராக பதவி வகித்து வந்துள்ளார். இவரது மனைவி சுனிதா. 

குடும்ப பிரச்சினை காரணமாக வேல்முருகன் நேற்று முன்தினம் காலை வீட்டின் கழிவறையில் இருந்த ஆசிட்டை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி வேல்முருகன் நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்