அரகண்டநல்லூர் அருகே அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அரகண்டநல்லூர் அருகே அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்;

Update: 2021-12-07 17:33 GMT

திருக்கோவிலூர்

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே உள்ள வீரபாண்டி கிராமத்தில் கடந்த அக்டோபர் மாதம் 4-ந் தேதி சித்ரா(வயது 43) என்பவர் மர்மமான முறையில் இறந்தது குறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இந்த நிலையில் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய வலியுறுத்தியும், இறந்துபோன சித்ராவின் குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ.20 லட்சம் நஷ்டஈடு வழங்கக்கோரியும் அரகண்டநல்லூரில் அனைத்துக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் மாரிமுத்து எம்.எல்.ஏ., விக்கிரவாண்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.சரவணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில கருத்தியல் பரப்பு துணை செயலாளர் தமிழ்நிலவன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முஸ்தாக்தீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேல்மாறன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் வளர்மதி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின்போது போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. இதில் இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகரச்செயலாளர் ஜாகிர் உசேன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்