கல்வராயன்மலையில் கூடுதல் டி ஜி பி தலைமையில் போலீசார் சாராய வேட்டை 12000 லிட்டர் ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் கூடுதல் டி ஜி பி தலைமையில் போலீசார் சாராய வேட்டை 12000 லிட்டர் ஊறல் அழிப்பு

Update: 2021-12-07 17:21 GMT

கச்சிராயப்பாளையம்

கல்வராயன் மலையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு(பொறுப்பு) கூடுதல் டி.ஜி.பி. மகேஷ் அகர்வால் தலைமையில்,  ஐ.ஜி. கபில்குமார் சரத்கார், கள்ளக்குறச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக், மதுவிலக்கு போலீஸ் சூப்பிரண்டு பெருமாள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரவிச்சந்திரன், விஜயகுமார், தட்சிணாமூர்த்தி, இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் கல்வராயன் மலையில் உள்ள சின்னதிருப்பதி, கிணத்தூர், ஆரம்பூண்டி, கொடமாத்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது சாராயம் காய்ச்சுவதற்காக மர்ம நபர்கள் பல்வேறு பகுதிகளில் பதுக்கி வைத்திருந்த 12,000 லிட்டர் ஊறலை கண்டுபிடித்து அழித்தனர். இதுகுறித்து கூடுதல் டி.ஜி.பி. மகேஷ் அகர்வால் கூறும்போது, கல்வராயன் மலை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது குற்றமாகும். மேலும் சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்