மத்திய அரசை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி:
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து விழிப்புணர்வு ஊர்வலமும் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் கே.பி.எஸ்.எம். கனிவண்ணன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் ராதாகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், ஞானப்பிரகாசம், நகர தலைவர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி தலைவர் சரவணன் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ராஜகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
கோஷங்கள்
ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும், எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு அதிகரிப்பதால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
வேலையில்லா திண்டாட்டத்தை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கொள்ளிடம் ஒன்றியக்குழு துணைத் தலைவர் பானுசேகர், மாவட்ட நிர்வாகிகள் ராஜேந்திரன், சிவராமன், சுப்பராயன், பட்டேல், மயிலாடுதுறை நகர தலைவர் ராமானுஜம், கட்சி நிர்வாகி கார்த்திக் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பழைய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் மணிக்கூண்டு, அரசு ஆஸ்பத்திாி சாலை, கச்சேரி ரோடு வழியாக புதிய பஸ் நிலையத்தை வந்தடைந்தது.