தூத்துக்குடியில் போலீஸ் வாகனம் மோதி முதியவர் சாவு

தூத்துக்குடியில் போலீஸ் வாகனம் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.;

Update: 2021-12-07 16:38 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி பங்களா தெருவை சேர்ந்தவர் முத்துசெல்வம் (வயது 63). இவர் தனியார் நிறுவனத்தில் ரோடு ரோலர் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று காலையில் தூத்துக்குடியில் இருந்து திரு.வி.க.நகர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால், சரக்குகளை ஏற்றி செல்லக்கூடிய போலீஸ் மினிலாரி வந்து கொண்டிருந்தது.

எதிர்பாராதவிதமாக போலீஸ் வாகனம், முத்துசெல்வம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த முத்துசெல்வம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார், போலீஸ் வாகனத்தை ஓட்டி வந்த போலீஸ்காரர் ராஜபாண்டி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்