சின்னமனூர் அருகே நெற்றியில் கண்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி

சின்னமனூர் அருகே நெற்றியில் கண்களுடன் அதிசய ஆட்டுக்குட்டி பிறந்தது. இதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.;

Update: 2021-12-07 14:29 GMT
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டையை சேர்ந்தவர் சக்திவேல். கூலித்தொழிலாளி. இவர் தனது வீட்டில் சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று சக்திவேல் வளர்த்த ஒரு ஆடு 2 குட்டிகளை ஈன்றது. இதில் ஒரு குட்டிக்கு நெற்றியில் 2 கண்கள் இருந்தது. இதையடுத்து அந்த அதிசய ஆட்டுக்குட்டியை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். 

மேலும் செய்திகள்