சேறும், சகதியுமான சாலை சீரமைப்பு

நாற்று நடும் போராட்டம் எதிரொலியாக சேறும், சகதியுமான சாலை சீரமைக்கப்பட்டது.

Update: 2021-12-07 13:08 GMT
வேடசந்தூர்

சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக, வேடசந்தூர் ஆத்துமேடு பழனி சாலையோரத்தில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. மேலும் அங்கு சேறும், சகதியுமாக இருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. 

இதனையடுத்து அப்பகுதி மக்கள், சாலையை சீரமைக்க வலியுறுத்தி அங்கு தேங்கியுள்ள தண்ணீரில் நாற்று நடும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். 

இதன் எதிரொலியாக நெடுஞ்சாலைத்துறை சார்பில், பொக்லைன் எந்திரம் மூலம் சாலை சீரமைக்கும் பணி நேற்று நடந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நாற்று நடும் போராட்டமும் ரத்து செய்யப்பபட்டது.

மேலும் செய்திகள்