கொடைக்கானல் மலைப்பாதையில் கவிழ்ந்த பஸ்

கொடைக்கானல் மலைப்பாதையில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Update: 2021-12-07 12:59 GMT
கொடைக்கானல்

கொடைக்கானலை அடுத்த கவுஞ்சி கிராமத்தில் இருந்து 50 பயணிகளுடன் நேற்று பகலில் கொடைக்கானலை நோக்கி தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை, தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை சேர்ந்த தங்கப்பாண்டி என்பவர் ஓட்டினார். 

கொடைக்கானல்-பூம்பாறை மலைப்பாதையில் அப்சர்வேட்டரி அருகே உள்ள பைன் மரக்காடுகள் என்னுமிடத்தில் பஸ் வந்து கொண்டிருந்தது. 

அப்போது எதிரே 2 கார்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கார்கள் மீது மோதாமல் இருப்பதற்காக பஸ்சை இடதுபுறத்தில் நிறுத்த முயன்றார். இதில், எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் பஸ் இறங்கி கவிழ்ந்தது. 

ஆனால் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் சிறிதுநேரம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

மேலும் செய்திகள்