குவிந்து கிடக்கும் குப்பைகள்

குவிந்து கிடக்கும் குப்பைகள்;

Update: 2021-12-07 12:47 GMT
பொங்குபாளையம் ஊராட்சிக்குட்பட்ட, பொங்குபாளையம், கிருஷ்ணா நகர், அம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும் இப்பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு பள்ளியும் உள்ளது. இந்நிலையில் இந்த பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் அப்புறபடுத்தாதாலும், கோழிகழிவுகள் உள்ளிட்டவை கொட்டப்படுவதாலும் பள்ளி செல்லும் குழந்தைகளும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், கோழிகழிவுகளைஇரவு நேரத்தில் கொட்டி செல்கின்றனர். இதனை கண்காணித்து வருவதாகவும், கோழி கழிவுகளை கொட்டுபவரகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்