ஏழுகுளம் பாசனப்பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பியுள்ளன.
ஏழுகுளம் பாசனப்பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பியுள்ளன
உடுமலை,
உடுமலை அருகே பி.ஏ.பி. ஏழுகுளம் பாசனப்பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பியுள்ளன.
குளங்கள்
திருமூர்த்தி அணையில் இருந்து உடுமலை வரை உள்ள பகுதிகளில் ஏழுகுளம் பாசனம் என்று அழைக்கப்படும் பகுதிகளில் தினைக்குளம், செட்டிகுளம், செங்குளம், கரிசல்குளம், அம்மாபட்டி குளம், பெரியகுளம், ஒட்டுக்குளம் மற்றும் வளையபாளையம் குளம் ஆகிய 8 குளங்கள் உள்ளன. பரம்பிக்குளம் ஆழியாறு
பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டத்தில் திருமூர்த்தி அணையில் இருந்து தளி வாய்க்கால் மூலம் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்காக இந்த குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த ஏழுகுளம் பாசனம் என்று அழைக்கப்படும் குளங்கள் மூலம் மொத்தம்2 ஆயிரத்து 786 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த பாசனப்பகுதிகளில் கரும்பு, வாழை, தென்னை சாகுபடி செய்யப்படுகிறது.
திருமூர்த்தி அணையில் இருந்து இந்த குளங்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை விடப்பட்ட தண்ணீர், மழை பெய்ய தொடங்கியதை தொடர்ந்து நிறுத்தப்பட்டது. இந்த குளங்களில்தண்ணீர் மட்டம் முழு கொள்ளளவிற்கு நிறைந்துள்ளது.
குளங்களில் தண்ணீர் இருப்பு
அதன்படி 11.55 அடி உயரம் உள்ள பெரியகுளத்தில் நேற்று நீர்மட்டம் 10.60அடியாக இருந்தது.
10அடி உயரம் கொண்ட ஒட்டுக்குளத்தில் 8.20அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. 10அடி உயரம் கொண்ட செங்குளத்தில் 8.10அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது.
7.5அடி உயரம் கொண்ட செட்டிகுளத்தில் 7அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. 9.25 உயரம் கொண்ட தினைக்குளத்தில் 8அடி உயரத்திற்கு தண்ணீரும் உள்ளது. 7.65அடி உயரம் கொண்ட கரிசல்குளத்தில் 7.50அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. 4.50அடி உயரம் கொண்ட அம்மாபட்டி குளத்தில்4அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. 10.33அடி உயரம் கொண்ட வளையபாளையம் குளத்தில் 9.70அடி உயரத்திற்கு தண்ணீரும் உள்ளது.
பெரியகுளத்தில் இருந்து உபரிநீர் குளத்துக்கால்வாய் மூலம் ஒட்டுக்குளத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. பெரியகுளத்தில் இருந்துவரும் உபரிநீர் மற்றும் நீர்வழித்தடங்கள்மூலமாக ஒட்டுக்குளத்திற்கு வரும் தண்ணீர் ஆகியவை ஒட்டுக்குளத்தில் இருந்து உபரிநீராக தங்கம்மாள் ஓடை மற்றும் ராஜவாய்க்காலில் திறந்து விடப்பட்டுள்ளது.