தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
தூத்துக்குடி:
தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சார வினியோகம் செய்யப்படும் பண்டாரம்பட்டி உயரழுத்த மின்பாதைகளில் நாளை (வியாழக்கிழமை) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அண்ணா நகர் 2, 3-வது தெரு, சின்னமணி நகர், மில்லர்புரம், பர்மாகாலனி, பால்பாண்டி நகர், டி.எம்.பி. காலனி 5-வது தெரு மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
இந்த தகவலை தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) ஜவகர்முத்து தெரிவித்து உள்ளார்.