காஞ்சீபுரம் அருகே ஆக்கிரமிப்பால் வயல்வெளியாக மாறிய குளம் மீட்பு

வருவாய்த் துறையினர், காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் சீயட்டி கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்தனர்.குளத்தின் ஆக்கிரமிப்பை பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் மீட்டனர்.

Update: 2021-12-07 11:51 GMT
தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை மீட்க ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. இந்தநிலையில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தியின் உத்தரவின் பேரில் மாவட்ட வருவாய்த் துறையினர், காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் சீயட்டி கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த கிராமத்தில் அனந்த கிருஷ்ணன் என்பவர் பல ஆண்டுகாலமாக 80 சென்ட் குளத்தினை ஆக்கிரமித்து வயலாக மாற்றி பயிர் செய்து வந்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் காஞ்சீபுரம் வருவாய்க் கோட்டாட்சியர் ராஜலட்சுமி, காஞ்சீபுரம் தாசில்தார் காமாட்சி, மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் நேரில் சென்று குளத்தின் ஆக்கிரமிப்பை பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் மீட்டனர்.

மேலும் செய்திகள்