வழிப்பறி கும்பலை கைது செய்யக் கோரி லாரி உரிமையாளர்கள் காஞ்சீபுரம் போலீசில் புகார்

லாரிகளை வழிமறித்து பணம் பறிக்கும் கும்பலை கைது செய்யக்கோரி லாரி உரிமையாளர்கள் காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி.யை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

Update: 2021-12-07 11:40 GMT
பணம் பறிக்கும் கும்பல்

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகாவில் மதூர், ஆரப்பாக்கம், படப்பை உட்பட பல்வேறு இடங்களில் எம்.சாண்ட் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பகுதிகளிலிருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்கள் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு கனரக லாரிகள் மூலம் ஜல்லிகள் மற்றும் எம்.சாண்ட் ஆகியன எடுத்து செல்லப்படுகிறது.

இந்தநிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர் பகுதிகளில் ஜல்லிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் லாரிகளை அடையாளம் தெரியாத கும்பல் வழிமறித்து லாரி டிரைவர்களிடம் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

புகார் மனு

எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனறு காஞ்சீபுரம் மாவட்டம் பம்மல், அனகாபுத்தூர் பகுதிகளை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் சந்திரன், சுரேஷ் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் டி.ஐ.ஜி. எம்.சத்தியபிரியாவை சந்தித்து புகார் மனு அளித்தனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்