ஓசூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
ஓசூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ஓசூர்:
சூளகிரி தாலுகா ஒட்டர்பாளையத்தை சேர்ந்தவர் வீராசாமி. இவரது மனைவி பெரிய பாப்பா (வயது 37). உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த பெரிய பாப்பா விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.