நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும்-அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் பெற அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்று நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

Update: 2021-12-06 21:53 GMT
சேலம்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் பெற அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்று நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
நிர்வாகிகள் சந்திப்பு
சேலம் மத்திய மாவட்டத்திற்குட்பட்ட மெய்யனூர், சூரமங்கலம், கொண்டாலாம்பட்டி, குகை, கிச்சிப்பாளையம், அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி உள்பட 13 இடங்களில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிகளுக்கு வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு பேசும் போது, சேலம் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களில் 46 ஆயிரம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 30 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 11-ந் தேதி சேலம் வருகிறார். அன்றைய தினம் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். சேலம் வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க வேண்டும் என்றார்.
மேற்கு மாவட்டம்
இதே போல சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தாரமங்கலம், கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, சங்ககிரி, எடப்பாடி நகரம், ஒன்றியம், மேட்டூர், கொளத்தூர், நங்கவள்ளி, மேச்சேரி ஆகிய 10 இடங்களில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி தலைமை தாங்கினார். வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் கோபால், மாவட்ட துணை செயலாளர்கள் கொடியரசு, பாலு, சம்பத்குமார், சுந்தரம், கொங்கணாபுரம் ஒன்றிய செயலாளர் பரமசிவம்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டங்களில் தி.மு.க. முதன்மை செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என். நேரு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும்
வருகிற 11-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் வர உள்ளார். அன்றைய தினம் நடைபெற உள்ள அரசு விழாவில் ஏராளமான நலத்திட்டங்களை வழங்குகிறார். மேலும் நடைபெற உள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் 100 சதவீதம் தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
இதனை செயல்படுத்தும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். மேலும் கூட்டுறவு சங்க தேர்தல் விரைவில நடைபெற முதல்-அமைச்சர் அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருகிறார். அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தி.மு.க. வெற்றி பெறும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சேலம் வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டு வரவேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். 
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் முன்னாள் நகர்மன்ற தலைவர்கள் கந்தசாமி, சாந்தி, நகர செயலாளர்கள் குப்பு என்கிற குணசேகரன், காசி விஸ்வநாதன், மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ரவிக்குமார், ஒன்றிய பொறுப்பாளர்கள் ராஜேஷ், பச்சமுத்து, மிதுன் சக்கரவர்த்தி, முன்னாள் ஒன்றிய செயலாளர் தங்கமுத்து, மகுடஞ்சாவடி ஒன்றிய  பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், இடங்கணசாலை பேரூர் செயலாளர் நாகேந்திரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன்,  பேரூர் செயலாளர் அர்த்தநாரீஸ்வரன், செயற்குழு உறுப்பினர்கள் அம்மாசி, முருகேசன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் சுப்ரமணியம், நிர்மலா,   தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு, துணை ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்