வீடு இடிந்து பெண் பலி

வீடு இடிந்து பெண் பலியானார்.

Update: 2021-12-06 21:35 GMT
பேரையூர், 
டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வி.வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி ராஜாமணி (வயது56). இவர் நேற்று காலை வீட்டில் சமையல் வேலையை செய்து கொண்டு இருந்துள்ளார். இவரது கணவர் கருப்பையா வீட்டின் வெளியே திண்ணையில் அமர்ந்து இருந்தார். அப்போது திடீரென வீடு இடிந்து விழுந்ததில் சமையல் செய்து கொண்டிருந்த ராஜாமணி இடிபாடில் சிக்கினார். உடனே அருகில் இருந்தவர்கள் படுகாயத்துடன் ராஜாமணியை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே ராஜாமணி இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து வி.சத்திரப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்