மின்கம்பம் மாற்றப்பட்டது
குளச்சல் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட உடையார்விளை சந்திப்பில் இருந்து கோணங்காடு, கோட்டவிளை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் 3 மின்கம்பங்கள் சேதமடைந்து முறிந்து விழும் நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்கள் நட்டனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
சுகாதார சீர்கேடு
நாகர்கோவில் இடலாக்குடியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரி அருகே கழிவுநீர் ஓடையில் குப்பைகள் தேங்கி அடைப்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, ஓடையில் தேங்கிய குப்பைகளை அகற்றி ஓடையை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- சித்தார்த்தன், தாமரைகுளம்.
வழிகாட்டு பலகை வைக்கப்படுமா?
குளச்சல் பள்ளி வாசல் அருகே 3 சாலைகள் சந்திக்கின்றன. இந்த பகுதியில் இருந்து கருங்கல், திருவனந்தபுரம் போன்ற பகுதிகளுக்கு செல்ல சாலையை அடையாளம் காட்ட வழிகாட்டு பலகை இல்லை. இதனால், வெளியூர்களில் இருந்து வருகிறவர்கள் வழி தவறி சென்று விடுகிறார்கள். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி பள்ளிவாசல் ரோடு அருகே வழிகாட்டி பலகை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முகமது சபீர், குளச்சல்.
போக்குவரத்துக்கு பயனற்ற சாலை
தடிக்காரன்கோணத்தில் இருந்து கீரிப்பாறைக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான தொழிலாளர்கள், மாணவ-மாணவிகள் பயணம் செய்கிறார்கள். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒகி புயல் வீசிய போது இந்த சாலை மிகவும் சேதமடைந்தது. அதன்பின்பு இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால், சாலை போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜினோ, தடிக்காரன்கோணம்.
சாலையை சீரமைக்க வேண்டும்
களியக்காவிளை அருகே குளப்புறம் ஊராட்சியில் மேக்கன்விளை பகுதியில் ஒரு சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்கிறார்கள். கடந்த பல ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படாமல் மிகவும் சேதமடைந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே, பொதுமக்கள் நலன் கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஷீபா, மேக்கன்விளை.
குடிநீர் வரவில்லை
வேர்கிளம்பி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சித்திரங்கோடு பகுதியில் பஞ்சாயத்து வாயிலாக வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பல நாட்களுக்கு மேலாக தண்ணீர் வரவில்லை. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, முறையாக குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அ.கிறிஸ்டோபர் சித்தி்ரங்கோடு.
வடிகால் வசதி வேண்டும்
மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சி அலுவலகம் அருகே மழைநீர் வடிகால் வசதி இல்லை. ஏற்கனவே இருந்த ஓடையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், மழைக்காலங்களில் சாலையில் வெள்ளம் தேங்கி நிற்பதால், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே,பொதுமக்கள் நலன் கருதி சாலையில் வடிகால் வசதி செய்து தர வேண்டும்.
-ஜெகதீஸ்வரலிங்கம், மேலகிருஷ்ணன்புதூர்.