மினி பஸ் கண்டக்டரிடம் தகராறு; வாலிபர் கைது

மினி பஸ் கண்டக்டரிடம் தகராறு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-12-06 20:07 GMT
சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே குவளைக்கன்னி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர நாராயணன். இவருடைய மகன் முனீஸ்வரன் (வயது 33). இவர் மினி பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். 

சம்பவத்தன்று சுப்புலாபுரத்தில் இருந்து கரிவலம்வந்தநல்லூருக்கு மினி பஸ் புறப்பட்டபோது, சுப்புலாபுரத்தைச் சேர்ந்த வெற்றிவேல் (31) திடீரென்று முனீஸ்வரனிடம் தகராறில் ஈடுபட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெற்றிவேலை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்