சட்டம் ஒழுங்கிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்-புதிய போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பேட்டி

நெல்லை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று புதிய போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கூறினார்.;

Update: 2021-12-06 20:04 GMT
நெல்லை:

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த மணிவண்ணன், சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி முதல்வராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து சென்னை போலீஸ் நிர்வாகத்துறை சூப்பிரண்டு சரவணன், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். புதிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நேற்று காலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். ரவுடிகள், கஞ்சா வியாபாரிகள் மற்றும் கூலிப்படையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பழைய குற்றவாளிகள் கண்காணிக்கப்படுவார்கள். பொதுமக்கள் அளிக்கப்படும் புகார் மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்