பிரகதீஸ்வரர் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
பிரகதீஸ்வரர் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நேற்று இந்த கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்களை, நுழைவு வாயில் பகுதியில மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் போலீசார் பரிசோதனை செய்த பின்னர் சாமி தரிசனம் செய்து அனுப்பினர்.