குடிநீர் வினியோகிக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் வினியோகிக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-06 19:38 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள அரசு ஊழியர்கள் வாடகை அடுக்குமாடி குடியிருப்புகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த குடியிருப்புகளுக்கு கடந்த சில நாட்களாக அத்தியாவசிய தேவைக்கும், குடிப்பதற்கும் தண்ணீர் வினியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் துறைமங்கலம் மூன்று ரோடு செல்லும் சாலையில் நேற்று இரவு மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த பெரம்பலூர் போலீசார், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்