மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் சிறுவன் கைது

மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் சிறுவன் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-12-06 19:28 GMT
நெல்லை:

பாளையங்கோட்டை பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆண்டனி ஜெகதா மற்றும் போலீசார் பெருமாள்புரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த சிறுவனை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் தொடர்புடையவன் என்பதும் தெரிய வந்தது. உடனே போலீசார் அந்த சிறுவனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்