நெல்லை,:
நெல்லை கங்கைகொண்டான் அருகே உள்ள பருத்தி குளத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 23). பொக்லைன் எந்திர டிரைவர். நேற்று முன்தினம் அந்தப்பகுதியில் உள்ள அவருடைய உறவினர் வீட்டு விஷேச நிகழ்ச்சி நடந்தது. அதற்காக வீட்டின் மாடியில் சீரியல் பல்புகள் கட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சதீஷ்குமார் மாடிக்கு சென்ற போது, எதிர்பாராதவிதமாக சீரியல் பல்புகள் மீது அவரது கைகள் பட்டுள்ளது.
இதில் மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே சதீஷ்குமார் பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.