திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்தவர் பிடிபட்டார்
திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்தவர் பிடிபட்டார்;
அன்னவாசல்
பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் இளங்கோ தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 36). இவர் அன்னவாசல் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனையடுத்து அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் அடங்கிய தனிப்படை போலீசார் செந்தில்குமாரை தேடி வந்தனர். இந்தநிலையில் தலைமறைவாக இருந்த செந்தில்குமாரை நேற்று தனிப்படையினர் பிடித்து கீரனூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் பெரம்பலூரில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்குமாரை பிடித்த தனிப்படையினரை இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மொழிஅரசு பாராட்டினார்.