போலீஸ் நிலையத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை

போலீஸ் நிலையத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை

Update: 2021-12-06 18:17 GMT
ஆம்பூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் சந்திரன் மற்றம் கட்சியினர் சரவணன், சக்தி ஆகியோருக்கு கடிதம் மூலம் மிரட்டல் அனுப்பிய நபரை கைது செய்யக் கோரி விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

 இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார் விடுதலை சிறுத்தை கட்சியினரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் டவுன் போலீஸ் நிலையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்