போலீஸ் உடையில் வந்து துணி வியாபாரியிடம் ரூ.1½ லட்சம் கொள்ளை
துணி வியாபாரியிடம் ரூ.1½ லட்சம் கொள்ளை;
ஆம்பூர்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவர் துணி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் தனது காரில் ஈரோட்டில் இருந்து வேலூருக்கு சென்று பட்டுப்புடவைகளை கடைகளுக்கு வினியோகம் செய்து விட்டு அதில் கிடைத்த பணம் 1 லட்சத்து 45 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு நேற்று ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த வெங்கிளி தேசிய நெடுஞ்சாலை அருகே காரை நிறுத்தினார். அப்போது பின்னால் மற்றொரு காரில் போலீஸ் சீருடையில் வந்த மர்ம நபர்கள் கனகராஜனிடம் இருந்த ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்தை கொள்ளையடித்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து கனகராஜ் கொடுத்த புகாரின் பேரில் ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.