பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர்
கரூர் வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையிலான போலீசார் குளத்துப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள காட்டுப்பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட வெங்கமேட்டை சேர்ந்த மணிகண்டன், ஜீவானந்தம், பசுபதிபாளையத்தை சேர்ந்த மகேந்திரன், வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த சஞ்சய்குமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.