டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை ஆணையாளர் கிராந்திகுமார் பாடி ஆய்வு

டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை ஆணையாளர் கிராந்திகுமார் பாடி ஆய்வு

Update: 2021-12-06 17:26 GMT
திருப்பூர்,
திருப்பூர் மாநகரில் வீடு, வீடாக சென்று சோதனை நடத்தி டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை ஆணையாளர் கிராந்திகுமார் பாடி ஆய்வு செய்தார்.
கொசு ஒழிப்பு பணி
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி 4-வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். 49-வது வார்டு பாலாஜி நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகள், சாலை பணிகளை ஆணையாளர் ஆய்வு செய்தார். அந்த பகுதிகளில் தேங்கிய குப்பைகளை உடனுக்குடன் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
52-வது வார்டு பழவஞ்சிப்பாளையம் பகுதியில் நுண்ணுயிர் உரமாக்கல் கிடங்கை ஆய்வு செய்தார். வள்ளலார் நகரில் வீடு, வீடாக சென்று சோதனை நடத்தி தண்ணீர் தொட்டிகளில் அபேட் மருந்து தெளிப்பு, புகை மருந்து அடிக்கும் பணி, டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் குப்பாண்டம்பாளையத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பார்வையிட்டு அதன் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து பாதுகாப்பாக வாழ பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
ஜெய்வாபாய் பள்ளி பராமரிப்பு
திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை ஆணையாளர் நேற்று ஆய்வு செய்தார். உதவி ஆணையாளர்கள் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.சிறப்பு முகாம்களில் புதிய வாக்காளர்களாக சேர்க்க, விண்ணப்பித்தவர்களின் படிவங்களை பெற்று அவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஊழியர்களுடன் ஆணையாளர் ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்