திருச்செங்கோடு அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவர் கைது

திருச்செங்கோடு அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவர் கைது;

Update: 2021-12-06 17:26 GMT
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு அருகே மொளசி பகுதியை சேர்ந்தவர் வெங்கடாஜலம் (வயது 65). இவர் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் ெதால்லை கொடுத்தார். அப்போது சிறுமியின் அலறம் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர் அங்கு சென்று சிறுமியை மீட்டு அழைத்து சென்றார். 
பின்னர் இதுகுறித்து அந்த பெண் அக்கம் பக்கத்தில் வசித்தவர்களிடம் கூறவே, அவர்கள் வெங்கடாஜலத்தை திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி விசாரணை நடத்தி சிறுமிக்கு பாலியல் ெதால்லை கொடுத்த வெங்கடாஜலத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோர்டில் ஆஜர்படுத்தி விட்டு பின்னர் சிறையில் அடைத்தார். 

மேலும் செய்திகள்