வலசுபாளையத்தில் பள்ளி மாணவனுக்கு டெங்கு காய்ச்சல்

வலசுபாளையத்தில் பள்ளி மாணவனுக்கு டெங்கு காய்ச்சல்

Update: 2021-12-06 17:12 GMT
சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வலசுபாளையம் கிராமத்தில் 9 வயது பள்ளி மாணவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். 

இதனையடுத்து, அவன் கோவை சிங்காநல்லுரியில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து சுல்தான்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா உத்தரவின்பேரில், வலசுபாளையத்தில் மருத்துவ முகாம் டாக்டர் கிருஷ்ணபிரபு தலைமையில் நடத்தப்பட்டது. 

மேலும், கிராமம் முழுவதும் கொசு மருந்து அடிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகதாஸ், சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்