சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Update: 2021-12-06 17:10 GMT
அவினாசி, 
அவினாசி பழைய பஸ் நிலையம் முதல் சூளை பஸ் நிறுத்தம் வரையில் கடைகளின் உரிமையாளர்கள் ரோட்டை ஆக்கிரமித்து முன்பு செட்டுகள் அமைத்திருந்தனர். இது தவிர சாலையோர கடைகளும் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருவதாலும், வங்கி, வணிக வளாகங்களுக்கு 4 சக்கர, இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் ரோட்டிலேயே வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி விடுவதால் சாதாரண நாட்களை விட முகூர்த்த நாள் மற்றும் விசேஷ நாட்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் நேரிடுகிறது.
 எனவே ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு கால அவகாசத்துடன் 2 முறை நோட்டீஸ் வழங்கியும் எவருமே ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி நேற்று நெடுஞ்சாலைத்துறையினர்அவினாசி கோபி ரோடு சந்திப்பிலிருந்து அதிரடியாக பொக்லைன் எந்திரம் மூலம் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அவினாசி வடக்கு ரதவீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது எல்லை பிரச்சினை குறித்து அங்குள்ள ஒரு மண்டப நிர்வாகிகளுக்கும் நெடுஞ்சாலைத்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்த அவினாசி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நெடு்ஞ்சாலைத்துறைப்பதிவில் உள்ளபடி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்