உளுந்தூர்பேட்டையில் கல்லூரி பேராசிரியர் வீட்டில் ரூ 1 லட்சம் நகை கொள்ளை

உளுந்தூர்பேட்டையில் கல்லூரி பேராசிரியர் வீட்டில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்;

Update:2021-12-06 22:35 IST
உளுந்தூர்பேட்டை

பேராசிரியர்

உளுந்தூர்பேட்டை பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வேஸ்வரன்(வயது 36.) உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு தனியார் பெண்கள் கல்லூரியில் துணைப் பேராசிரியராக பணிபுரிந்து வரும் இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கும்பகோணத்திற்கு சென்றார். 

பின்னர் மீண்டும் அங்கிருந்து குடும்பத்துடன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவில் போடப்பட்ட பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. அதில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமொழியன் தலைமையிலான போலீசார் கொள்ளை நடந்த வீ்ட்டை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகை மற்றும் தடயங்களை சேகரிக்கப்பட்டது. மேலும் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கல்லூரி பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் உளுந்தூர்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்