எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பூர்,
திருப்பூர் வடக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை திருப்பூர் ரெயில் நிலையம் முன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட தலைவர் பஷீர் அகமது தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஹிதாயத்துல்லா வரவேற்றார்.
பாபர் மசூதி மீண்டும் கட்ட வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா உசேன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில பிரசார செயலாளர் விடுதலை அரசு ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இதில் துணை தலைவர் அப்துல் சத்தார், செயலாளர் அன்வர், பொருளாளர் ஜாபர் சாதிக், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் ஹபிபுர் ரகுமான் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் அப்பாஸ் நூரி நன்றி கூறினார். இதில் பெண்கள் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.