ஆண்டிப்பட்டி துணை தாசில்தார் பணி இடைநீக்கம்; கலெக்டர் உத்தரவு
போலி ஒப்பந்த பத்திரம் தயாரித்து மோசடி செய்த வழக்கில் சிக்கிய ஆண்டிப்பட்டி துணை தாசில்தார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தேனி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணியாற்றியவர் மணவாளன். இவரும், தேனியை சேர்ந்த சந்தனபாண்டியன் என்பவரும், தேனி அருகே ஊஞ்சாம்பட்டி அனுகிரகா நகரை சேர்ந்த சந்திரசேகரன் என்பவரின் பெயரில் உள்ள நிலத்தை அபகரிக்க போலியான ஒப்பந்த பத்திரம் தயாரித்து மோசடி செய்தனர்.
இதுதொடர்பாக சந்திரசேகரன் கொடுத்த புகாரின் பேரில், தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தனபாண்டியனை சில மாதங்களுக்கு முன்பு கைது செய்தனர். இந்த மோசடி வழக்கில் துணை தாசில்தார் மணவாளன் கடந்த 3-ந்தேதி கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து துணை தாசில்தார் மணவாளன் மீது துறைவாரியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, அவரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேற்று உத்தரவிட்டார்.