தடுப்பூசி செலுத்தாமல் வந்தவர்களை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்
தடுப்பூசி செலுத்தாமல் வந்தவர்களை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்
பந்தலூர்
தமிழக, கேரள, கர்நாடக எல்லையில் பந்தலூர் தாலுகா உள்ளது. இதற்கிடையில் கர்நாடக மாநிலத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. இதையொட்டி பந்தலூரில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று பாட்டவயல் சோதனைச்சாவடியில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரியில் இருந்து கூடலூர் நோக்கி வந்த கார்களை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் வந்தவர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். தடுப்பூசி செலுத்தாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.