காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணுக்கு ஆபாச படங்களை அனுப்பி தொல்லை; தனியார் கம்பெனி ஊழியர் கைது
காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணுக்கு ஆபாச படங்களை அனுப்பி தொல்லைகொடுத்த தனியார் கம்பெனி ஊழியர் கைது செய்யப்பட்டார்.
சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளம்பெண், தனியார் கம்பெனி ஒன்றில் மேலாளராக வேலை செய்தார். அதே கம்பெனியில் ஊழியராக வேலை செய்த அஸ்வின் விக்னேஷ் என்பவர் இளம்பெண்ணை காதலித்தார். ஆனால் அந்த காதலை இளம்பெண் ஏற்கவில்லை.
இதனால் ஆத்திரம் கொண்ட அஸ்வின் விக்னேஷ், இளம்பெண்ணின் செல்போனுக்கு ஆபாச படங்களை அனுப்பி தொல்லை கொடுத்தார். அவருடைய தாயாருக்கும் ஆபாச படங்களை அனுப்பினார். இதனால் அஸ்வின் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கும்படி, மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அஸ்வின் விக்னேஷ், சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர். அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.