கல்லூர் கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
கல்லூர் கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
ஊத்தங்கரை:
கல்லூர் கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
ஊத்தங்கரை அருகே உள்ள நொச்சிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கல்லூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கிராம பெண்கள் குடிநீர் கேட்டு கல்லாவி- ஊத்தங்கரை சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கல்லூர் கிராமத்தில் தரமான நீர்த்தேக்க தொட்டி இல்லாததால் தண்ணீரை தேக்கி வைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில்லை.
உரிய நடவடிக்கை
குடிநீர் பிரச்சினை தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை நேரில் கூறியும் இதுவரை எந்தவித நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதனால் சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். குடிநீர் பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். இதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.