பாவூர்சத்திரம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி;
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே செல்லத்தாயார்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அருள்தாமஸ் மகன் அருள்ராஜ் (வயது 31). விவசாய வேலை பார்த்து வந்தார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு அவர் தனது வீட்டில் மின் விளக்குகளால் அலங்கார வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்ததும் பாவூர்சத்திரம் போலீசார், அருள்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அருள்ராஜ்க்கு அருள்செல்வி என்ற மனைவியும், பொன்திலீப் என்ற மகனும், பொன் ஹெலினா என்ற மகளும் உள்ளனர்.