பெருந்துறை வாரச்சந்தையில் ரூ.6 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
பெருந்துறை வாரச்சந்தையில் ரூ.6 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை ஆனது.
பெருந்துறை
பெருந்துறை வாரச்சந்தையில் ரூ.6 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை ஆனது.
ஆடுகள் விற்பனை
பெருந்துறை வாரச்சந்தையில் நேற்று ஆடுகள் விற்பனை நடைபெற்றது.
இந்த சந்தைக்கு பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், திருப்பூர் மாவட்டம் கன்னிவாடி, முத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
ரூ.6 லட்சம்
இதில் வெள்ளாடு ஒன்று ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்கப்பட்டது. செம்மறி ஆடு ஒன்று ரூ.4 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.
ஆடுகள் மொத்தம் ரூ.5 லட்சத்து 80 ஆயிரத்துக்கு விற்பனை ஆனதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பெருந்துறை, திங்களூர், சீனாபுரம், விஜயமங்கலம், காஞ்சிக்கோவில், நசியனூர், வெள்ளோடு, சென்னிமலை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இந்த சந்தைக்கு வந்து ஆடுகளை விலைபேசி பிடித்து சென்றனர்.