குட்டையில் மூழ்கி சிறுமி பலி

குட்டையில் மூழ்கி சிறுமி பலியானார்

Update: 2021-12-05 20:57 GMT
தா.பேட்டை
கள்ளக்குறிச்சி மாவட்டம், நாரியமனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். கூலித் தொழிலாளி. இவரது மனைவி மலர். இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தை மற்றும் 3 வயதில் ஜெயஸ்ரீ ஆகிய 2 குழந்தைகள். இந்தநிலையில் மலர் மீண்டும் கர்ப்பமாக இருந்ததால் பிரசவத்திற்காக தா.பேட்டையை அடுத்த கண்ணனூர் அருகே கீரிப்பட்டி கிராமத்திலுள்ள தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. சம்பவத்தன்று மலரின் தாய் கூலி வேலைக்கு சென்று விட்டதால் ஜெயஸ்ரீ வீட்டில் வெளியே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது வீட்டின் அருகே தேங்கிய குட்டையில் சிறுமி ஜெயஸ்ரீ மூழ்கி பரிதாபமாக இறந்து போனாள். சிறுமியை காணாமல் தேடியபோது குட்டையில் மூழ்கியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் ஜெம்புநாதபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜதுரை, சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்