பிளஸ்-2 மாணவனை கடத்த முயன்ற 2 பேர் கைது

நாகமலைபுதுக்கோட்டை அருகே பிளஸ்-2 மாணவரை கடத்த முயன்ற வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-12-05 20:03 GMT
நாகமலைபுதுக்கோட்டை,

நாகமலைபுதுக்கோட்டை அருகே பிளஸ்-2 மாணவரை கடத்த முயன்ற வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பிளஸ்-2 மாணவர் கடத்த முயற்சி

மதுரை துவரிமான் களத்து தெருவைச் சேர்ந்தவர் செல்வரத்தினம். இவரது மகன் பரத்ராஜ் (வயது 17). மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளிக்குச் செல்வதற்காக வழக்கம் போல் வீட்டில் இருந்து சைக்கிளில் நேற்று முன்தினம் புறப்பட்டார். துவரிமான் சுடுகாடு அருகே சென்று கொண்டிருந்த போது சரக்கு வாகனத்தில் வந்த முகமூடி அணிந்த 3 பேர் பள்ளி மாணவனை கடத்த முயற்சி செய்தனர். ஆனால் மாணவன் அவர்களிடமிருந்து தப்பிச் சென்று விட்டார்.
இதுகுறித்து மாணவன் கொடுத்த புகாரின் பேரில் நாகமலைபுதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் சிவகுமார், போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

இந்த வழக்கில் பிளஸ்-2 மாணவரை கடத்த முயன்றதாக துவரிமானைச் சேர்ந்த சின்னச்சாமி மகன் செந்தில்கண்ணன் (34), மகாராஜன் மகன் சரவணன் (32), ஆகியோரை கைது செய்தனர். இவர்களது மற்றொரு கூட்டாளியான விருதுநகரைச் சேர்ந்த மலைச்சாமி என்பவரைத் தேடி வருகின்றனர்.
கைதான அவர்களிடம் எதற்காக மாணவரை கடத்த முயன்றார்கள்? இதற்கு பின்னணியில் வேறு யாராவது இருக்கிறார்களா? உள்ளிட்ட பல்வேறு ேகாணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
------


மேலும் செய்திகள்