விபத்தில் டிக்கெட் பரிசோதகர் படுகாயம்
விபத்தில் டிக்கெட் பரிசோதகர் படுகாயம்
சிவகாசி,
சிவகாசி பள்ளப்பட்டி ரோடு முத்துராமலிங்கம் காலனியில் வசித்து வருபவர் சக்திவேல் (வயது 58). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் சிவகாசி- பள்ளப்பட்டி ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது மழையின் காரணமாக அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி இருந்ததால் வேகத்தடையில் மோட்டார்சைக்கிள் ஏறி கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த சக்திவேலை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.