ஊருக்குள் புகுந்த மான்

ஊருக்குள் புகுந்த மான்;

Update: 2021-12-05 18:03 GMT
தாயில்பட்டி, 
தாயில்பட்டி அருகே உள்ள வெற்றிலையூரணியில் வழி தவறி பெண் மான் ஒன்று ஊருக்குள் புகுந்தது. இதைப்பார்த்த தெருநாய்கள் மானை கடிக்க துரத்தின. இதனால் பயந்து போன மான் ஊருக்குள் அங்கும், இங்குமாக ஓடியது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் நாய்களிடம் இருந்து மானை மீட்டு சல்வார்பட்டி வருவாய் ஆய்வாளர் சாரதாதேவியிடம் ஒப்படைத்தார்கள். இதுகுறித்து அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை வனச்சரகர் அன்னத்தாய் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று மானை மீட்டு செண்பகத்தோப்பு காட்டுப்பகுதியில் விட்டனர்.

மேலும் செய்திகள்