விருத்தாசலம் அருகே ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு

விருத்தாசலம் அருகே ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2021-12-05 16:15 GMT
விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள டி.வி புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் சந்தோஷ் குமார் (வயது 11). இவர் ஓலையூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று அந்த பகுதியில் உள்ள வெள்ளாற்றிக்கு குளிப்பதற்காக சென்றார். அப்போது வெள்ளாற்றில் தண்ணீர் அதிகமாக சென்று கொண்டிருந்ததால் திடீரென ஆற்று தண்ணீரில் மூழ்கினார். 

சாவு

இதை பார்த்த அங்கிருந்தவர்கள், உடனடியாக சந்தோஷ்குமாரை மீட்டனர். தொடர்ந்து மயங்கிய நிலையில் இருந்த அவரை, சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சந்தோஷ்குமாரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில்  சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்